Posts

Showing posts from February, 2025
தேர்தல் முடிந்து விட்டது. வாக்கு பதிவு என்பது ஒரு ஜனநாயக கடமை என்பதை எல்லோரும் உணர்திருந்தாலும் பண நாயகத்தை நம்புவர்கள் அதை பற்றி பெரிதாக அலட்டி கொண்டு இருப்பதில்லை. அவர்களுக்கு யார் வந்தாலும் ஒன்றுதான் என்ற மனப்பான்மை இருக்கிறது. இவர்களால் ஊழல் மிக அதிகமாக ஊகுவிக்கபடுகிறது. இவர்களுக்கு பணத்தை கொண்டு சாதிக்கும் திராணி இருக்கிறது. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளின் பயனாக தடுக்க பட்டது என்னவோ பத்து சதவிகித கருப்பு பணம் மட்டுமே என்பது ஒரு தேர்தல் அதிகாரியின் அனுபவ வார்த்தைகள். இவர்கள் வெற்றி பெற்று அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இதேதான் செய்ய போகிறார்கள். இதில் மட்டும் கட்சி, இனம், மொழி, சாதி, மத பாகுபாடுகள் எதுவும் இல்லை.